ஒளிமுறிவு அல்லது ஒளி விலகல் என்பது ஒளியின் வேகத்தில் ஏற்படும் மாற்றத்தால் ஏற்படும் ஒளிசெல்லும் திசையிலிருந்தான விலகல் ஆகும். இது பொதுவாக ஓர் ஊடகத்தில் இருந்து வேறான அடர்த்தியுடைய பிறிதோர் ஊடகத்துள் ஒளி செல்லும் போது பார்க்கக்கூடியதாக இருக்கும். ஒளி முறிவுகளைப் பொதுவாகப் பார்க்கக்கூடியதாக இருப்பினும், எந்தவொரு அலையும் ஓர் ஊடகத்திலிருந்து பிறிதொரு ஊடகத்துள் செல்லும்போது முறிவடையும். எடுத்துக்காட்டாக ஒலிஅலைகள்.
ஒருவர் நேரான பென்சிலோ அல்லது பேனை போன்ற நேரான பொருள் ஒன்றை பகுதியா நீர் உள்ள கண்ணாடி அல்லது ஒளிபுகக்கூடிய கிண்ணமென்றில் வைத்தால் அப்பொருளானது நீர் உள்ள இடத்தில் வளைந்து காட்சியளிக்கும். இது நீரில் இருந்துவரும் ஒளிக்கதிர்களானது முறிவடைவதால் ஏற்படுவதாகும். இது உண்மையாக இருப்பதை இட பார்வைக்கு குறைந்த ஆழத்தில் இருந்து வருவதைப் போன்று தோற்றமளிக்கும். இவ்வாறு தோன்றுவது தோற்ற ஆழம் என்றழைக்கப்படும்.



